திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட.. உண்மையான ஹீரோ இவர்தான்! மெட்ரோ பட நடிகருக்கு குவியும் பாராட்டுகள்! ஏன் தெரியுமா??
தமிழ் சினிமாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ‘மெட்ரோ’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சிரிஷ். அவர் தற்போது பிஸ்தா என்ற படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. நடிகர் சிரிஷ் நடிப்பது மட்டுமின்றி சமூக நலனிலும் அக்கறை கொண்டவர். பலபின் தங்கியவர்களுக்கு தன்னால் இயன்ற ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். அவர் தற்போது இரு தமிழக சிலம்பாட்ட வீரர்களுக்கு சர்வதேச போட்டியில் கலந்துகொள்ள உதவி செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, திறமைவாய்ந்த குழந்தைகளான 11ம் வகுப்பு படிக்கும் நான்சி எஸ்தர் மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் அபிஷேக் ராஜன் ஆகியோர் பற்றிய தகவலை எனது நண்பர் ஒருவரின் மூலம் அறிந்தேன். அவர்களின் திறமையையும் சாதனையையும் கண்டு பிரமித்து போனேன். ஆனாலும் அவர்களிடம் திறமைகள் இருந்தாலும், நேபாளத்தில் நடக்கவிருந்த யூத் கேம்ஸ் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை என கேள்விபட்டேன்.
இந்நிலையில் அந்தக் குழந்தைகள் கண்டிப்பாக இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வேண்டும் என நான் விரும்பினேன். அதனால் அவர்களுக்கு தேவையான பயண மற்றும் தங்கும் செலவுகளை நானே செய்ய முடிவு செய்து அவர்கள் போட்டியில் கலந்து கொள்ள உதவியுள்ளேன். இனிவரும் காலத்திலும் இதுபோன்ற திறமையான நபர்களை ஊக்குவித்து தொடர்ந்து என்னால் முடிந்த பல உதவிகளை செய்வேன் என கூறியுள்ளார். இந்த நிலையில் நடிகர் சிரிஷின் இந்த நல்ல மனதை பலரும் பாராட்டி வருகின்றனர்.