#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிகில் உட்பட தீபாவளி சிறப்பு காட்சி ரத்து! பிகிலாவது, திகிலாவது.. அமைச்சர் அதிரடி!
பிகில் உட்பட தீபாவளி சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறப்பு காட்சி என்ற பெயரில் அதிக கட்டணம் வசூல் செய்வதால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். அதனால்தான் பிகில் உட்பட திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சல் போன்ற பிரமாண்ட வெற்றிப்படத்தையடுத்து தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி இருவரும் "பிகில்" படத்தில் இணைந்துள்ளனர் . இப்படத்தை ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது . ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தநிலையில் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை மறுநாள் 25 ஆம் தேதி பிகில் படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், அதிக கட்டண வசூல் புகார் வருவதாக பிகில் படம் உட்பட எந்த படத்திற்கு பண்டிகைக்கால சிறப்பு காட்சி ரத்து என அரசியல் தலைவர்கள் தெரிவித்தனர்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "பிகிலாக இருந்தாலும் சரி, திகிலாக இருந்தாலும் சரி சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டும்." கூடுதல் கட்டணம் செலுத்தி பொதுமக்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.