#Breaking: மருத்துவமனையில் ஏ.ஆர் ரஹ்மான்; நலம்விசாரித்த முதல்வர் முக ஸ்டாலின்.. உடல்நலம் முன்னேற்றமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!



MK Stalin Asking AR Rahman Health Status 

ஏ.ஆர் ரஹ்மானின் உடல்நலம் குறித்து முக ஸ்டாலின் விசாரித்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், உலகளவில் ரசிகர்களை கொண்டவர் ஆவார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் இவர் இசையமைத்து வருகிறார். தொடர்ந்து பல படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று இசையமைப்பாளர் ஆயிரம்விளக்கு பகுதியில் செயல்பட்டு வரும் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. 

AR Rahman

மருத்துவமனையில் அனுமதி

இதனால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டவருக்கு, மருத்துவர்கள் இரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்யும் சிகிச்சை அளித்து வருகின்றனர் என கூறப்படுகிறது. ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக அவரின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர். அவரின் உடல்நலம் முன்னேறும் என நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: #Breaking: இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு நெஞ்சு வலி; அப்பலோ மருத்துவமனையில் அனுமதி.!

AR Rahman

முதல்வர் நலம்விசாரித்தார்

இந்நிலையில், மருத்துவமனையில் செய்யப்பட்ட ஏ.ஆர் ரஹ்மானின் உடல்நலம் தொடர்பாக கேட்டறிந்த தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து மூத்தவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்! அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி!" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: #Breaking: இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு நெஞ்சு வலி; அப்பலோ மருத்துவமனையில் அனுமதி.!