மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்பாவான சந்தோசத்தில் துள்ளி குதித்த கணவர்.! அடுத்த சில நிமிடங்களிலேயே வந்த கொலைநடுங்கவைத்த அதிர்ச்சி தகவல்!!
கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் நங்கவிளை பகுதியில் வசித்து வருபவர் விஜின். இவரது மனைவி மெர்லின் திவ்யா. இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில் மெர்லின் கர்ப்பமானார்.
இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மெர்லினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரது குடும்பத்தார்கள் அவரை அடிக்கடி பரிசோதனை செய்யும் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். அதனை தொடர்ந்து அவருக்கு நேற்று காலை பெண் குழந்தை பிறந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனை கேட்டு விஜின் மற்றும் அவரது குடும்பத்தினர் உச்சகட்ட மகிழ்ச்சியில் மூழ்கினர். ஆனால் சிறிது நேரத்திலேயே மெர்லினுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தையும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து மெர்லின் மற்றும் குழந்தை இருவரும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜின் மற்றும் அவரது குடும்பத்தார்கள் கதறி அழுதுள்ளனர். இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையால்தான் தாய் மற்றும் குழந்தை இறந்து விட்டதாக மெர்லின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.