திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மும்பையில் சொகுசு வீடு வாங்கிய மிருனாள் தாக்கூர்.. இத்தனை கோடியா?
பிரபல பாலிவுட் நடிகையான மிருனாள் தாக்கூர் தமிழில் சீதா ராமன் என்ற திரைப்படத்தின் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது தென்னிந்திய மொழிகளில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் தெலுங்கு நடிகர் நானிக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமிழில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவர் திரைப்படங்களில் குடும்ப பெண்ணாக நடித்தாலும், தனது சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். அந்த வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை மிருணாள் தாக்கூர் மும்பையில் 10 கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு வீடு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல நடிகை கங்கனா ரனாவத்தின் குடும்பத்தினரிடமிருந்து, அவர் 2 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளதாகவும் இந்த 2 வீடுகள் அருகருகே அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.