திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
'பேட் வித் ஆட்டோ கிராஃப்'! யோகி பாபுக்கு கிடைத்த பம்பர் கிஃப்ட்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் மகேந்திர சிங் தோனி. இவர் தற்போது தோனி எண்டர்டெயின்மென்ட்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி சினிமா படங்களை தயாரித்து வருகிறார். இந்நிறுவனத்தின் முதல் படமாக லெட்ஸ் கெட் மேரிட் என்ற திரைப்படம் தயாராகி வருகிறது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இத்திரைப்படத்தில், ஹரிஷ் கல்யாண், யோகி பாபு, நதியா மற்றும் இவானா போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.
இத்திரைப்படத்திற்கான சூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. சூட்டிங் இடைவேளைகளின் போது கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார் யோகி பாபு. அவர் படித்துக் கொண்டிருந்த காலங்களில் ஸ்கூல் கிரிக்கெட் டீமில் கலந்துகொண்டு மாநில அளவிலான சாம்பியன் பட்டத்தையும் வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஆன எம் எஸ் தோனி தான் பயன்படுத்திய கிரிக்கெட் பேட் ஒன்றை தனது ஆட்டோகிராஃபுடன் யோகி பாபுவிற்கு பரிசளித்திருக்கிறார். அவருடைய கிரிக்கெட் ஆர்வத்தை பாராட்டி இந்த பரிசை வழங்கி இருக்கிறார் தோனி. இதனைத் தொடர்ந்து தோனி பரிசளித்த கிரிக்கெட் பேட்டை வைத்து பயிற்சி செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருக்கிறார் யோகி பாபு. மேலும் அந்த வீடியோவில் எம் எஸ் தோனிக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.