மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதன் முறையாக விளம்பர படங்களில் கலக்கும் முகேன் ராவ்! எந்த விளம்பரத்தில் தெரியுமா? வைரலாகும் வீடியோ.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட நிலையில் பிக்பாஸ் பட்டத்தை வென்று முதலிடம் பிடித்தவர் பாடகர் முகேன் ராவ் .
மலேசியாவை சேர்ந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் பெருமளவில் பிரபலமானார். மேலும் இவர் பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் மிகவும் நட்புடனும், அன்பாகவும் நடந்து கொண்டார். பாடகர், நடிகர், மாடலிங் என பன்முக திறமை கொண்டு விளங்கிய முகேன் சத்தியமா என்ற பாடலின் மூலம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முகேன் ராவ்வின் தந்தை காலமானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியது. தற்போது ரசிகர்களை குஷி படுத்தும் விதத்தில் புதிதாக விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளார்.
அதாவது arun excello விளம்பரத்தில் அசத்தலாக பாட்டு பாடி நடித்துள்ள வீடியோ இணையத்தில் வெளியாகவே ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.