#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வதந்திகளை நம்பாதீங்க, இதுதான் உண்மை. ரசிகர்களுக்கு விளக்கமளித்து வீடியோ வெளியிட்ட முருகதாஸ்.! என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவரவிருக்கும் படம் சர்க்கார். இப்படத்தில் விஜய் அரசியல்வாதியாக நடிக்கிறார்.
இவ்வாறு தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் இப்படத்திற்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருந்த நிலையில் இப்படத்திற்கு தடை விதிக்க கோரி வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் ‘சர்கார்’படத்தின் கதை , தன்னுடைய 'செங்கோல்' படத்தின் கதை எனவும் முருகதாஸ் தனது கதையை திருடி படம் இயக்கியுள்ளார் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை எழுப்பிய நிலையில் சர்கார் கதை திருட்டு விவகாரம் குறித்து ஏ. ஆர். முருகதாஸ் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் அவர் வழக்கம் போல் நிறைய வதந்திகள் பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் சின்ன விளக்கம் அளிக்கிறேன்.மதிப்புமிக்க பாக்யராஜ் சார் வந்து என்னை அழைத்து இந்த மாதிரி பிரச்சனை போய்க் கொண்டிருக்கிறது. ஒருவனின் ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிட்டார்கள் என்ற கதையை அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்துள்ளார்.
அந்த ஒரு கரு, அந்த ஒரு ஸ்பார்க். மற்றபடி இந்த கதைக்கும், அந்த கதைக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. ஆனால் நமக்கு முன்பு ஒரு உதவி இயக்குனர் கதையை பதிவு செய்துள்ளார் என்பதற்காக அவரை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் படம் துவங்கும்போது ஒரு கார்டு போடுமாறு பாக்யராஜ் சார் சொன்னார். அதற்கு நானும் சரி என்று ஒப்புக் கொண்டேன்.
அந்த வகையில் மட்டும் தான் நான் படத்தில் அந்த கடிதத்தை வெளியிடுகிறேன். மற்றபடி இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஏ.ஆர். முருகதாஸ். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
Stop the rumours ! pic.twitter.com/9uHY1wRtOk
— A.R.Murugadoss (@ARMurugadoss) 30 October 2018