மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லியோ... இந்த ரெண்டு மட்டும்தான் பெஸ்ட் மத்ததெல்லாம் வேஸ்ட்... கலக்கத்தில் விஜய் ரசிகர்கள்.?
சினிமா ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று லியோ திரைப்படம் வெளியானது. தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் ரசிகர்களின் உற்சாகமான வரவேற்புடன் இந்த திரைப்படம் வெளியானது. பல்வேறு கலவையான விமர்சனங்களை இந்த திரைப்படம் பெற்று வந்தாலும் நிறைய விஷயங்களில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் இருப்பதை காண முடிகிறது. இந்த திரைப்படம் உண்மையாகவே தமிழ் ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமே என சினிமா விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தில் இரண்டு விஷயங்கள் மட்டும் தான் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தி இருக்கிறது என கருத்து தெரிவித்திருக்கும் விமர்சகர்கள் அனிருத்தின் இசை மற்றும் அன்பறிவு அமைத்திருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் ஆகியவைதான் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான படத்தை அனிருத்தின் பிஜிஎம் தாங்கி நிற்பதாக தெரிவித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகள் எல்சியு-விற்காக வழிந்து திணிக்கப்பட்டது போல் இருப்பதாகவும் மேலும் தேவையில்லாத காதல் காட்சிகள் படத்தின் வேகத்தை குறைப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் இந்த திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய சறுக்கல் என தெரிவித்திருக்கின்றனர்.