திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சூப்பர் ஸ்டார் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை பிரபல இசையமைப்பாளரா.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்.?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் ரஜினிகாந்த். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
80களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தமிழ் சினிமாவில் நடித்து வரும் ரஜினிகாந்த் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டியுள்ளார். தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ள ரஜினிகாந்த் தற்போது வரை தொடர்ந்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'அண்ணாத்த' திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்பதால் தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த வருகிறார். இப்படம் வெற்றியடையும் என்று ரஜினிகாந்த் பெருத்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் ரஜினிகாந்த் கையில் ஒரு சிறு குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த குழந்தை இசையமைப்பாளர் அனிருத் என்று கூறப்பட்டுவருகிறது. இப்புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.