மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இசையால் தூக்கிவிட்ட ஏணியை எட்டிஉதைத்த சிவகார்த்திகேயன் - துரோகத்தின் வலியில் டி.இமான்.!
தமிழ் திரையுலகில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று, இன்று உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரின் திரைவாழ்க்கை தொடக்கத்தில் வெளியான திரைப்படங்களுக்கு இசையமைத்து கொடுத்தவர் டி.இமான்.
இவர்களின் கூட்டணியில் உருவாகி வெளியான மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், நம்ம வீட்டு பிள்ளை, ரஜினி முருகன் உட்பட பல படங்களின் பாடல்கள் மக்கள் மத்தியில் ஹிட் அடித்தது.
இசை ரீதியாக சிவாவை உயர்த்திவிட்ட ஏணியாக டி. இமான் இருந்தார். இந்நிலையில், சமீபமாகவே இவர்களின் கூட்டணி அமையவில்லை. இதற்கு டி.இமான் தெரிவித்துள்ள காரணம் திரையுலகில் அதிர்வலையை பதிவு செய்துள்ளது.
இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கருத்து வேறுபாடு தொடர்பாக இமான் தெரிவிக்கையில், "சிவா எனக்கு துரோகம் செய்துவிட்டார். அதனை வெளியில் சொல்ல இயலாது. அவருடன் இனி இந்த ஜென்மத்தில் நான் பயணிக்கப்போவது இல்லை.
அடுத்த ஜென்மத்தில் நான் இசையமைப்பாளராக இருந்தால் பார்க்கலாம். துரோகம் குறித்து அவரிடமே நான் கேட்டுவிட்டேன். அவர் ஒரு பதிலை சொன்னார். அப்பதில்லை என்னால் இங்கு தெரிவிக்க முடியாது. சில விஷயத்தை மூடி மறைப்பது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக" என தெரிவித்தார்.