மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"விக்னேஷ் சிவனுக்கு எச்சரிக்கை விடுத்த பிரபல இசையமைப்பாளர்!" ஏன் தெரியுமா.?
2012ம் ஆண்டு "போடா போடி" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். தொடர்ந்து நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் "எல் ஐ சி" என்ற புதிய படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜப்பான் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் பிரபல இசையமைப்பாளரும், இயக்குனருமான எஸ். எஸ். குமரன் ஒரு பேட்டியில், "விக்னேஷ் சிவன் தனது புதிய படத்திற்கு 'எல் ஐ சி' என்று பெயரிட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். கடந்த 2015ம் ஆண்டே எனது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் இந்த டைட்டிலை பதிவு செய்துள்ளேன்.
இதையடுத்து விக்னேஷ் சிவன் என்னைத் தொடர்பு கொண்டு இந்த டைட்டிலை தனக்கு தருமாறு கேட்டார். ஆனால் என் கதைக்கு இந்த தலைப்பு மிகப் பொருத்தமாக இருப்பதால் நான் மறுத்து விட்டேன். ஆனால் இப்போது அவர் என் தலைப்பை அபகரித்துள்ளார். அவர் மீது வழக்கு தொடர உள்ளேன்" என்று கூறியுள்ளார்.