மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
படத்துல அது செம மாஸா இருக்கும்.! துணிவு குறித்து முக்கிய பிரபலம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்.! உற்சாகத்தில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'. இந்த படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் டப்பிங் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் 'துணிவு' படத்தின் பாடல் குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரானிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு அவர், பாடல்கள் செம மாஸாக இருக்கும். அஜித் சாருக்கு ஒரு ரசிகனாக என்ன பண்ணனும்னு நினைக்கிறேனோ, எந்த மாதிரி நடனம் இருக்கும்னு நினைக்கிறேனோ அதே பண்ணியிருக்கேன். இப்போ வேற எதுவும் சொல்லமுடியாது என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.