மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடச்சே.. வெக்கமா இல்ல.. இந்த பிழைப்புக்கு நாலு பேரிடம்..., - மைனா நந்தினியின் கணவரை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..! ஏன் தெரியுமா?..!!
விஜய் தொலைக்காட்சியில் தனது யதார்த்தமான நடிப்பாலும், நகைச்சுவை பேச்சாலும் பிரபலமானவர் மைனா நந்தினி. இவரை அறியாதவர்கள் யாரும் இல்லை என்றுதான் கூற வேண்டும். மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நந்தினி.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமடைந்தார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் விமல் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சூரிக்கு மனைவியாகவும் நடித்தார்.
பின்பு சீரியல் நடிகர், நடன இயக்குனரான யோகேஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த ஜோடிகளுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. அத்துடன் நந்தினி சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மைனா நந்தினி, பட வீடியோக்களையும் ப்ரொமோஷன் செய்து வருகிறார். இந்த நிலையில் யோகேஷ் ரம்மி விளம்பரத்தில் நடித்துள்ள வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகவே, வெக்கமா இல்ல., பணத்திற்காக நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்வீர்களா? என்று ரசிகர்கள் பலரும் ஆதங்கத்தில் அவரை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.