#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் யார்? முதன்முதலாக போட்டுடைத்த நமீதா! ஷாக்கான ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 மிகவும் கலகலப்பாகவும், மோதலுடனும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இந்த சீசனில் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களும் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர். மேலும் பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த சீசனில் திருநங்கையான நமீதா போட்டியாளராக கலந்து கொண்டார்.
இவர் கதை சொல்லட்டுமா என்ற டாஸ்க்கில் தான் குடும்பத்திலும், சமூகத்திலும் பட்ட அவமானங்கள், கஷ்டங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சு அனைவரையும் கண்கலங்க வைத்தது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய ஒரு சில நாட்களிலேயே தவிர்க்கமுடியாத காரணங்களால் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்நிலையில் அண்மையில் நமிதா சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில், ரசிகர் ஒருவர் நீங்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்டில் போவீர்களா? என்று கேட்டதற்கு, போகலாம் போகாமலும் இருக்கலாம் என்று பதிலளித்துள்ளார். பின் இந்த பிக்பாஸ் சீசனில் வின்னர் யார்? என கேட்டதற்கு, சிபி அல்லது இசைவாணி ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் வெற்றியாளராக இருக்கலாம் என நமீதா மாரிமுத்து தெரிவித்துள்ளார்.