#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா! நம்ம வீட்டு பிள்ளை படம் இதுவரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது தெரியுமா?
தனது சொந்த முயற்சியாலும், திறமையாலும் இன்று தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது படத்திற்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் குடும்பமாக இவரது படத்தை பார்த்து ரசிக்கின்றனர்.
தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துவந்த சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளியான ஓரிரு படங்கள் சற்று சறுக்கலை சந்தித்தது. இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜுடன் இணைந்து தான் விட்ட இடத்தை மீண்டும் பிடித்துள்ளார் சிவகர்ச்சிகேயன்.
இவர்கள் கூட்டணியில் உருவான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தில் சிவகாத்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்க, சூரியின் காமெடி படத்தி வெற்றிக்கு மேலும் கைகொடுத்துள்ளது என்றே கூறலாம்.
இந்நிலையில் படமும் செம்ம வசூல் சாதனை செய்து வருகின்றது, தமிழகத்தில் மட்டுமே இப்படம் இதுவரை ரூ 50 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் தமிழகத்தில் ரெமோ, வேலைக்காரனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் மூன்றாவது ரூ 50 கோடி படமாக நம்ம வீட்டு பிள்ளை இடம் பிடித்துள்ளதாம்.