#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மிகுந்த எதிர்பார்ப்பில் இன்று வெளியாகும் நம்ம வீட்டு பிள்ளை! சாதிப்பாரா சிவகார்த்திகேயன்?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் சினிமா துறையில் சாதித்த நடிகர்களில் இவரும் ஒருவர். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துவந்த சிவாவின் சமீபத்திய படங்கள் தோல்வி அடைந்தது.
சீமராஜா, Mr.லோக்கல் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறாதது சற்று ஏமாற்றமாகவே அமைந்தது. இந்நிலையில் பிரபல இயக்குனர் பாண்டிராஜுடன் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்து நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே உருவான கேடி பில்லா கில்லாடி ரங்கா படம் மாபெரும் வெற்றிபெற்றதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடித்துள்ளார்.
இன்று உலகம் முழுவதும் இந்த படம் வெளியாக உள்ளது. அண்ணன் தங்கை செண்டிமெண்ட், கிராமத்து பின்னணியில் படத்தின் கதை நகரும் என்பது படத்தின் ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகிறது. நிச்சயம் சூரியின் காமெடி இந்த படத்தில் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இம்மண் இசையில் பாடல்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.