மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் ஸ்டாரா.? என்னால முடியாது! தெறித்து ஓடிய பிரபு! அசால்ட்டாக செய்து முடித்த நடிகர் நாசர்!! என்ன தெரியுமா?
இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, விஜயகுமார், நாசர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் சந்திரமுகி. இந்தப் படம் வெளியாகி திரையரங்குகளில் ஒரு வருடத்திற்க்கு மேல் ஓடியுள்ளது. சந்திரமுகி திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல சாதனை படைத்தது.
மேலும் அந்தப் படம் ரிலீசாகி பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும் அதில் வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் தற்போதும் மக்கள் மனதில் இன்றுவரை நீடித்திருக்கிறது. அதிலும் நடிகர் ரஜினியை அடித்து வீட்டை விட்டு வெளியேற சொல்லும் காட்சி இன்றும் மனதில் மனதில் நிலைத்துள்ளது. இயக்குனர் வாசு முதலில் அந்த காட்சியில் நடிகர் பிரபுவைதான் நடிக்க கூறியுள்ளார்.
அதனை ஆரம்பத்தில் ஒப்புக்கொண்ட பிரபு பின்னர் தன்னால் அவ்வாறு நடிக்க இயலாது என கூறியுள்ளாராம். அவரை தொடர்ந்து நடிகர் விஜயகுமாரும் இந்த மாதிரி காட்சியில் நடிக்க முடியாது என கூற, பின்பு நடிகர் நாசரே தான் நடிப்பதாக கூறி ரஜினிகாந்தை வீட்டை விட்டு வெளியேறும் காட்சியில் நடித்துள்ளாராம். இதுகுறித்து நடிகர் நாசரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.