திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாவ் செம்ம... திருமண நாளில் நயன் - விக்கி தம்பதியினர் செய்த நெகிழ்ச்சி செயல்... உற்சாகத்தில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனை கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருகிறார். நயன்தாராவின் அசத்தலான நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.
இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு தங்களது பெற்றோர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து இன்று சென்னைக்கு அருகில் ஈசிஆர் சாலையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ரெஸ்டாரண்ட்தில் வைத்து இவர்களது திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்களது திருமணத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள், திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் எல்லாம் சேர்த்து மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு திருமண விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நயன் - விக்கி தம்பதியினரின் இந்த நெகிழ்ச்சி செயல் பலரையும் பாராட்ட வைத்துள்ளது.