திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விக்கியுடன் மாலை நேரத்து மயக்கம்... வைரலான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புகைப்படம்.!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சந்திரமுகி, கஜினி, தனி ஒருவன் என தொடர்ந்து வெற்றி படங்களின் மூலம் நம்பர் ஒன் கதாநாயகியாக உயர்ந்தார்.
நயன்தாரா, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இந்தத் திரைப்படத்தின் போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு இடையே காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் ஜூன் 9-ம் தேதி இந்த தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளது. சமீபத்தில் தங்கள் குழந்தைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடியது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடி. இந்தியில் ஷாருக்கான் உடன் இவர் நடித்த ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கிறது. இந்தத் திரைப்படம் பத்து நாட்களில் 797 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
Bliss😇 #WikkyNayan pic.twitter.com/xl5Ih5Q7As
— Nayanthara✨ (@NayantharaU) September 17, 2023
இதனைத் தொடர்ந்து நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் உருவான இறைவன் திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த பிசியான செட்யூலுக்கு நடுவில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நீச்சல் குளம் அருகே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார் நயன்தாரா. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.