மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியின் பிறந்த நாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த விலையுயர்ந்த பரிசு.!
அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், பாக்யராஜ், பூர்ணிமா, சினேகா, பிரசன்னா, அஜித், ஷாலினி, சூர்யா, ஜோதிகா என்று சினிமாவில் இணைந்தது மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் இணைந்த பிரபலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
அப்படி அந்த பட்டியலில் இணைந்த ஒரு முக்கிய பிரபலங்கள் தான் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி. நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்தபோது, அந்த திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் காதல் ஏற்பட்டது. தற்போது அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு, குழந்தை, குடும்பம் என செட்டிலாகி விட்டனர்.
ஆனாலும் திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி இருவரும் இணைந்து, பல்வேறு புதிய தொழில்களை ஆரம்பித்து வருகிறார்கள். அதே நேரம் தங்களுடைய சினிமா பயணத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான், நயன்தாராவின் பிறந்த நாளான கடந்த 18ஆம் தேதி தன்னுடைய மனைவிக்கு விக்னேஷ் சிவன் என்ன பரிசு கொடுத்திருப்பார்? என ரசிகர்கள் யோசிக்க தொடங்கினர். தற்போது அதற்கான விடை கிடைத்திருக்கிறது. அதாவது, நடிகை நயன்தாராவிற்கு பிறந்தநாள் பரிசாக அவருடைய கணவர் விக்னேஷ் சிவன் Maybach காரை பரிசாக வழங்கியிருக்கிறாராம்.
தற்போது அந்த காரின் லோகோவை மட்டும் புகைப்படம் பிடித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு கணவருக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்திருக்கிறார் நடிகை நயன்தாரா. மிகவும் விலையுயர்ந்ததாக சொல்லப்படும் இந்த காரின் மதிப்பு 2 கோடி முதல், 4 கோடி வரையில் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.