#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"ஐரா" வில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நயன்தாரா தோன்றுவதால் மிகுந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது நடித்து வரும் ஐரா படத்தில் இரண்டு வேடங்களில் நடிப்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த படங்களான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று தமிழ் சினிமாவில் வர்ணிக்கப்படும் நயன்தாரா மா மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் தற்பொழுது ஓசையில்லாமல் விறு விறுப்பாக நடித்து வருகிறார்.
அறம் மற்றும் குலேபகாவலி ஆகிய படங்களை தயாரித்த கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது . ஹாரர் த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நயன்தாரா இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்
இதில் ஒரு வேடத்தில் இயல்பாக தோற்றமளிக்கும் நயன்தாரா, மற்றொரு வேடத்தில் கருமை நிறமாக சோகத்தில் காட்சியளிக்கிறார். இது திகில் படம் என்பதால், நயன்தாராவின் மற்றொரு வேடம் பேயாக இருக்குமென தெரிகிறது. தற்போது இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
இப்படம் குறித்து தெரிவித்த தயாரிப்பாளர் கொட்டபாடி ஜே ராஜேஷ்." நயன்தாராவுடன் தொடர்ந்து பணியாற்றுவது மிகவும் பெருமைக்குரியது. அறம் படத்தை தொடர்ந்து உச்சத்தை நோக்கி போய் கொண்டு இருக்கும் அவருடைய திரை உலக அந்தஸ்து "ஐரா" படத்தின் மூலம் மேலும் உயரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
ஐரா" என்ற வார்த்தை யானையை குறிக்கும், யானை பலத்தை குறிப்பிடும் ஒரு கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இருக்கும் இந்த படம் ஒரு திகில் படமாகும்" என்கிறார் அவர்.