#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
Mr. லோக்கல் டீமிற்கு அட்டகாசமான பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த லேடி சூப்பர்ஸ்டார்.! என்ன பரிசு தெரியுமா?
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நயன்தாரா நடித்துள்ளார்.
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படும் இந்த படத்தில், ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும் ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இபபடத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தில் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் படப்பிடிப்பின் கடைசி நாளில் நயன்தாரா படக்குழுவினர் அனைவருக்கும் வாட்ச் பரிசளித்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்