மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. பிரபல மாஸ் நடிகருக்கு அக்காவாகிறாரா நயன்தாரா.! அதுக்கு சம்பளம் இத்தனை கோடியா??
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவருக்கு முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகை நயன்தாரா ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால்பதித்தார். அவரது கைவசம் தற்போது தமிழில் மண்ணாங்கட்டி மற்றும் டெஸ்ட் போன்ற படங்கள் உள்ளன.
யாஷ்க்கு அக்காவாகும் நயன்தாரா
அதுமட்டுமின்றி அவர் மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அவரை கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள டாக்சிக் திரைப்படத்தில் நடிக்க வைக்க படக்குழு அணுகிள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த திரைப்படத்தில் ஹீரோவாக கேஜிஎஃப் புகழ் யாஷ் நடிக்க உள்ளாராம்.மேலும் அந்த படத்தில் நயன்தாரா யாஷ்க்கு அக்காவாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
டபுள் மடங்கான சம்பளம்
அந்த ரோலில் முதலில் பாலிவுட் நடிகை கரீனா கபூர்தான் நடிக்கவிருந்தாராம். ஆனால் திடீரென அவர் படத்திலிருந்து விலகிய நிலையிலேயே படக்குழு நயன்தாராவை அணுகியுள்ளது. மேலும் தான் ஹீரோயினாக நடிக்கும் படங்களுக்கு 10 முதல் 11 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த நயன்தாரா யாஷ்க்கு அக்காவாக நடிக்க இருமடங்கு சம்பளத்தை உயர்த்தி ரூ 20 கோடி கேட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.