திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வீட்டு பணியாட்களை நயன்தாரா எப்படி நடத்துறார் பார்த்தீங்களா.! மாமியார் உடைத்த ரகசியம்.! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக, முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது நீண்ட நாள் காதலனான இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணமான 4வது மாதத்திலேயே அவர்கள் இருவரும் அழகிய இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களானதாக அறிவித்தனர். மேலும் அவர்கள் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
ஆனாலும் அவர்கள் தாங்கள் 2016ஆம் ஆண்டே பதிவுதிருமணம் செய்து கொண்டதாக ஆதாரங்களை சமர்ப்பித்து அதற்கு முற்றுபுள்ளி வைத்தனர். இந்த நிலையில் முதன்முறையாக நயன்தாராவின் மாமியார் மீனாகுமாரி செய்தியாளர்கள் சந்திப்பில் நயன்தாரா குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, நயன்தாரா வீட்டில் சமையல், அயர்னிங், கிளீனிங் போன்றவற்றிற்கு 8 பேர் வேலை செய்கின்றனர். அவர்களில் வீட்டு வேலை செய்யும் ஒரு அம்மா மிகவும் கவலையாக இருப்பதை கண்ட நயன்தாரா அவரிடம் உங்களுக்கு என்ன பிரச்சனை? என கேட்டுள்ளார்.
அவர் தான் நான்கு லட்சம் ரூபாய் கடனில் கஷ்டப்படுவதாக கூறிய நிலையில், உடனே அவர் அந்த அம்மாவிற்கு 4 லட்சம் ரூபாயை கொடுத்து உதவி செய்தார். மேலும் நயன்தாராவின் அம்மா கேரளாவில் இருந்து வந்தபோது வேலை பார்க்கும் ஒருவருக்கு தனது இரண்டு தங்க வளையல்களை கொடுத்தார். பணியாட்களும் நயன்தாராவை கேட்காமல் ஒரு பொருளையும் எடுக்க மாட்டார்களாம். அனைவரும் மிகுந்த நம்பிக்கை வாய்ந்தவர்கள் என கூறியுள்ளார்.