மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிறைவடைந்த நயன்தாரா பட ஷூட்டிங்.! கேக் வெட்டி கொண்டாட்டம்.! வைரல் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா அன்னபூரணி திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நடித்து வரும் திரைப்படம் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960. இந்தப் படத்தை ப்ளாக் ஷீப் யூடியூப் சேனல் புகழ் ட்யூட் விக்கி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு
செய்கிறார்.
நயனின் மண்ணாங்கட்டி
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சான் ரோல்டன் இசையமைக்கிறார். படத்தில் நயன்தாராவுடன் இணைந்து யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் துவங்கியது.
கேக் வெட்டி கொண்டாட்டம்
இந்நிலையில் தற்போது வெற்றிகரமாக படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ஹீரோயின் நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.