மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்த இருவரால் சினிமாவில் இருந்து விலகுகிறாரா நடிகை நயன்தாரா?? செம அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து தனது திறமையால் அவர் பெருமளவில் பிரபலமாகி ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். இளைஞர்களின் கனவு நாயகியாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் இவருக்கென முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். தொடர்ந்து ஏழு வருடங்களாக காதலித்து வந்த இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். மேலும் திருமணமான 4 மாதத்திலேயே தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களானதாகவும் அறிவித்தனர். அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தைகள் பெற்றுக் கொண்டனர்.
நடிகை நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தன் கைவசம் உள்ள படங்களை நடித்து முடித்துவிட்டு, சினிமாவில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் பரவி வருகிறது. தங்களது இரு மகன்களையும் நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து நயன்தாரா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளிவரவில்லை.