திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"உங்கள தலைல தூக்கி வச்சு ஆடுனதுக்கு வச்சு செஞ்சுட்டிங்க".. நயன்தாராவால் கடுப்பான ரசிகர்கள்..!!
நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்காக ஒட்டுமொத்த ஹோட்டலையே ஒரு வாரத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர்.
இவர்களது திருமணத்தில் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில், திருமணத்தில் கலந்து கொள்ளும் நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் கேமரா, செல்போன் என எதிலும் புகைப்படம் எடுக்ககூடாது என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதற்கான காரணம் இவர்களின் திருமண நிகழ்வுகளை பிரபல ஓடிடி நிறுவனத்திற்கு ரூ.25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததுதான் என்று கூறப்படுகிறது. இதனை மீறியும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் இருவரும் தங்களது திருமண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாங்கள் கொடுத்த 25 கோடி ரூபாய் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று கேட்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
ஆனால் அவை அனைத்தும் வதந்தி என்று netflix நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்தது. இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு 25 கோடி ரூபாய்க்காக தங்களது திருமண நிகழ்வுகள் ஒளிபரப்பும் உரிமையை நயன்-விக்கி கொடுத்திருப்பது ரசிகர்களை கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.
ரசிகர்கள் கூறுவதாவது, "நீங்கள் நடிக்கும் படத்தை நாங்க காசு கொடுத்து தான் பாக்குறோம். அதுல ஏதாவது ஒரு நியாயமிருக்கு. ஆனா உங்க கல்யாணத்த கூட ரூ.25 கோடிக்கு வித்துட்டிங்க. அதையும் நாங்க காசு கொடுத்து பார்க்கணுமா? உங்க நடிப்பால ஈர்க்கப்பட்டு தலையில் தூக்கி வச்சு ஆடுனா? எங்கள முட்டாள் ஆக்கிட்டீங்க, வச்சு செஞ்சுட்டிங்க" என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.