கெத்தான புதிய அவதாரமெடுக்கும் லேடி சூப்பர்ஸ்டார்.! மாஸ் ஹீரோக்களையே மிஞ்சிடுவார் போலவே..

தமிழ் சினிமாவில் ரஜினி,விஜய் அஜித் சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். மேலும் பல்வேறு சர்ச்சைகள் தன்மீது எழுந்த போதும் அதையெல்லாம் பொருட்படுத்தாத அவர் தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்தில் சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்ந்தெடுத்து, நடித்துவந்த நயன்தாரா தற்போது முன்னணி நடிகர்களுடன் சாய்ரா நரசிம்மரெட்டி, பிகில், தர்பார், லவ் ஆக்சன் ட்ராமா போன்ற தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நயன்தாரா தற்போது பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான ராணா தயாரிக்கும் புதிய தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இதில் நயன்தாரா போலீஸ் வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது