மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யாருப்பா இது?., பகத் பாசில் எங்க?.. முகத்தோடு முகமாய் ஒட்டிக்கொண்டு போட்டோ எடுத்த நஸ்ரியா..!
நடிகை நஸ்ரியா தனது நாய்க்குடியுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகிய "நேரம்" திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நஸ்ரியா. இவர் அடுத்ததாக "ராஜா ராணி" படத்தில் நடித்திருந்தார். ராஜா ராணி படத்தில் இவருடைய எக்ஸ்பிரஷன், சிரிப்பு, கண்ணசைவு போன்றவற்றால் மயங்கிய ரசிகர்கள் இவரை அணுஅணுவாக ரசிக்க தொடங்கினார்.
இதன் பின்னர் நையாண்டி, வாயை மூடி பேசவும் மற்றும் திருமணம் எனும் நிக்கா உள்ள படங்களிலும் நஸ்ரியா நடித்துள்ளார். நஸ்ரியாவின் க்யூட்டான எக்ஸ்பிரஷனுக்கு ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம். இவர் நிறைய மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த 2014 இல் நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் நீண்ட நாட்களாக படங்களில் நடிக்காமல் இருந்துவந்த நிலையில், "அடடே சுந்தரா" என்ற படத்தில் நடித்தார். மேலும் மலையாள படங்கள் பலவற்றிலும் நஸ்ரியா நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் தனது சமூக வலைத்தளபக்கத்தில் வெளியிடுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. அவர் தனது நாய்க்குட்டியுடன் நஸ்ரியா க்யூட்டாக சிரித்துக்கொண்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனைக்கண்ட ரசிகர்கள் யாருப்பா இது?, பகத் பாசில் எங்கே? என கமெண்டுகளை செய்து வருகின்றனர்.