மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிவகார்த்திகேயன் பட இயக்குனரை மேடையில் அந்த வார்த்தை கூறி திட்டிய நெல்சன்.. என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் நெல்சன் திலிப் குமார். இவர் தமிழில் பல திரைப்படங்களில் இயக்கி வெற்றி படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார்.
இவர் இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்த 'கோலமாவு கோகிலா' என்ற படமே நெல்சனிற்கு அறிமுக படமாகும். முதல் படமே மிகப்பெரிய ஹிட்டானது. இதனை அடுத்து டாக்டர், மிருகம் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 'ஜெயிலர்' திரைப்படம் திரையில் வெளிவர தயாராகிக் கொண்டிருக்கிறது.
இது போன்ற நிலையில், கமலஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிக்கும் திரைப்படத்திற்கு ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்குனராக இருக்கிறார். இந்த இயக்குனரை அவன் இவன் என்று மரியாதை இல்லாமல் நெல்சன் மேடையில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் நெல்சன் பேசியதாவது, " நானும், ராஜ்குமார் பெரிய சாமியும் மணிரத்தினம் சாருக்கு மிகப்பெரிய ஃபேன். ராஜ்குமாரின் போனில் தான் புகைப்படம் எடுத்தோம். மறுநாள் அந்த போனை தொலைத்து விட்டார். பொக்கிஷமாக அந்த புகைப்படத்தை வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த விஷயத்திற்காக இப்போது வரை நான் இவனை திட்டிக் கொண்டிருக்கிறேன் என்று நெல்சன் பேசினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.