திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
படப்பிடிப்பிற்காக தூத்துக்குடிக்கு சென்ற ரஜினிகாந்த்.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் ரஜினிகாந்த். இவர் தமிழில் 80களின் ஆரம்பங்களில் இருந்து தற்போது வரை தொடர்ந்து தனது நடிப்பு திறமையை நிரூபித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவருகிறார்.
இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ரஜினிகாந்த், சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது.
இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக தூத்துக்குடி அருகில் கன்னியாகுமரியில் உள்ள ஆரல் வாய்மொழி எனும் பகுதிக்கு சென்று இருக்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் இவரை திட்டி வருகின்றனர். சமீபத்தில் தூத்துக்குடியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் இப்போது வரை உணவின்றி தவித்து வருகின்றனர். இதை சற்றும் கண்டு கொள்ளாத ரஜினி தூத்துக்குடி வரை வந்துவிட்டு மக்களை பார்க்காமல் செல்கிறார் என்று திட்டி வருகின்றனர்.