மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா" ரவீந்திரனை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.!?
தமிழ் சினிமாவில் இயக்குனரும் தயாரிப்பாளருமாக வளம் வந்தவர் ரவீந்திரன். இவர் தற்போது சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வருகிறார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் நபர் ரவீந்திரன்.
கடந்த வருடம் சீரியல் நடிகை மகாலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி பலரும் பலவிதமாக கேலி பேசி வந்தனர். இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தங்களது வேலைகளில் பிஸியாக இருந்து வந்தனர் மகாலட்சுமி, ரவீந்திரன் தம்பதியினர்.
இது போன்ற நிலையில் சமீபத்தில் நடந்த மோசடி வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையிலிருந்து வெளிவந்த ரவீந்திரனுக்கு தொடர்ந்து பல்வேறு உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டு வந்தது.
இருந்தபோதிலும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ரிவ்யூ செய்து வீடியோக்கள் வெளியிட்டு வந்திருந்தார். இதனிடையே திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மூக்கில் டியூப்போடு பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து சமூக வலைத்தள சேனல்களுக்கு பேட்டியளித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் இவரை திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். "கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா" என்றும் கேட்டு வருகின்றனர்.