#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஞானவேல் ராஜா செய்த செயலால் பிரபல இயக்குனரை வம்பிக்கிழுக்கும் நெட்டிசன்கள்.!
பிரபல இயக்குனர் அமீரின் இயக்கத்தின் வெளியான ராம் திரைப்படத்தை பற்றி மேக்கிங் வரையில் ஒண்ணும் வரல என சுதா கொங்காரா கருத்து தெரிவித்ததாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்தது சர்ச்சையானது. இந்த நிலையில், அது பற்றி இயக்குனர் சுதா கொங்காரா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் ஒரு பேட்டியை வழங்கினார். அந்த பேட்டியில் இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான ராம் திரைப்படம் தொடர்பாக இயக்குனர் சுதா கொங்காரா மேக்கிங் வரையில் ஒன்னும் வரல என்று கமெண்ட் அடித்திருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
பருத்திவீரன், மௌனம் பேசியதே உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய அமீர் தொடர்பாக சுதா கொங்காரா கமெண்ட் அடித்ததாக ஞானவேல் ராஜா தெரிவித்த விவகாரம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. இயக்குனர் அமீரின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் என பலரும் கொங்காராவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்த சூழ்நிலையில் தான், சுதா கங்காரா கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இயக்குனர் அமீர் அண்ணாவிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது. நான் பிரசாத் ஸ்டூடியோவிற்கு வெளியே வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். எனக்கு அது நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஏனென்றால் இறுதிச்சுற்று படத்திற்காக எனக்கு முதன்முதலாக திரையுலகிலிருந்து போன் செய்து பாராட்டிய சிலரில் அவரும் ஒருவர்.
நான் ஒரே ஒரு விஷயம் தான் அவரிடம் சொன்னேன். என் படத்தில் வந்த மதியின் கதாபாத்திரம் முத்தழகின் பாதிப்பு தான் என்றும், ஒரு ஆணின் எழுத்துகளில் ஒரு பெண் கதாபாத்திரம் இவ்வளவு முழுமையாக எழுதப்பட்டது அதுவே முதல் முறை என்றும் அவரிடம் சொன்னேன்.
நான் என் படத்தில் மதி மற்றும் பொம்மி கதாபாத்திரங்களில் நடித்த நடிகைகளிடம் பருத்திவீரன் படத்தை பார்த்து விட்டு வருமாறு தான் சொல்லி அனுப்பினேன். அதுதான் தமிழ் சினிமாவில் தடம் பதித்த மிகச்சிறந்த ஒரு இயக்குனருக்கு நான் செய்யும் மரியாதை. இதுதான் நான் சொல்ல விரும்பும் விஷயம் நன்றி என தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இருந்தாலும் அவரை வம்புக்கு இழுக்கும் விதமாக, சமூக வலைதளவாசிகள் அதெல்லாம் இருக்கட்டும், அமீரின் ராம் திரைப்படத்தைப் பற்றி நீங்க என்ன சொன்னீங்க? என்று அதை மட்டும் சொல்லுங்க என கேள்வியெழுப்பி வருகிறார்கள்.