#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"ஏ. ஆர். ரஹ்மான் செய்த செயலால் கடுப்பான ரசிகர்கள்!" வைரலாகும் பதிவு..
மிக்ஜாம் புயலால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறி காட்சியளிக்கிறது. கடந்த டிசம்பர் 3ம் தேதி மாலை ஆரம்பித்த மழை, நேற்று இரவு வரை கனமழையாக கொட்டித் தீர்த்தது. புயலுக்கு முன்பாக சென்னை முழுவதும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 45 செ மீ. மழையும், பூந்தமல்லியில் 34 செ.மீ. மழையும், ஆவடி மற்றும் காட்டுப்பாக்கத்தில் தலா 28 மற்றும் 27 செ. மீ மழையும், வட சென்னை மற்றும் தாம்பரத்தில் தலா 24 செ. மீ மழையும் பெய்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
இதையடுத்து பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் மழை தொடர்பான புகார்கள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பதிவிட்டு வருகின்றனர். அரசு தீவிரமாக நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. தன்னார்வலர்களும், சில பிரபலங்களும் கூட களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது "பிப்பா" படத்தின் மெயின் பர்வானா பாடல் குறித்த விளம்பரத்தை பகிர்ந்துள்ளார். சென்னையே வெள்ளத்தில் தத்தளிக்கும்போது இது தேவையா என்று நெட்டிசன்கள் ஏ. ஆர். ரஹ்மானை வறுத்தெடுத்து வருகின்றனர்.