மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிவ கார்த்திகேயனின் அயலான் திரைப்படத்திற்கு புது சிக்கல்... ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம்.!
தமிழ் சினிமாவில் கமர்சியல் ஹீரோக்களில் முதன்மையாக இருப்பவர் சிவ கார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
சிவ கார்த்திகேயன் மற்றும் ராகுல் ப்ரீத் சிங் ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அயலான். இந்தத் திரைப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். 24 ஏஎம் மற்றும் கேகேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது.
வருகின்ற தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியிடப்படுவதாக இருந்தது. மேலும் இந்த திரைப்படமானது முழு நீள லைவ் ஆக்ஷனில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் அதிகமான விஎஃப் எக்ஸ் மற்றும் கிராபிக் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் கிராபிக் காட்சிகளுக்கான பணிகள் இன்னும் முடிவடையாததால் ரிலீஸ் தேதியில் மேலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் தற்போது 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.