மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது! நடிகை நிக்கி கல்ராணி முதுகில் டாட்டூ குத்தியுள்ளது இவரது பெயரா? ஷாக்கான ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. இவர் தான் நடித்த முதல் படம் மூலமே தமிழ் சினிமாவில் பிரபலமாகிவிட்டார். அதனை தொடர்ந்து அவர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவர் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.
மேலும் நிக்கி கல்ராணி சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருந்தார். அந்த படம் வெற்றிபெறாவிட்டாலும் அந்த படத்தில் வந்த சின்ன மச்சான் பாடல் மாபெரும் வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து நிக்கி கல்ராணி தற்போது சசிகுமாரின் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.
இவ்வாறு பிரபலமான நடிகை நிக்கி கல்ராணி தனது முதுகு புறத்தில் அர்ச்சனா என பச்சை குத்தியுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அது யாருடைய பெயர் என ஆர்வத்துடன் கேள்வி எழுப்பிய நிலையில் அது எனது தங்கை சஞ்சனாவின் உண்மையான பெயர் எனவும், அவரை அதிகம் நேசிப்பதால் தான் அவரது பெயரை பச்சை குத்தியுள்ளதாக நிக்கி கல்ராணி கூறியுள்ளார்.
சஞ்சனா காதல் செய்வீர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் அதனை தொடர்ந்து கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.