திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஜெயம் ரவி, சிம்புவை தொடர்ந்து பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்! வெளியான புதிய தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் பூமி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தெலுங்கு நடிகை நிதி அகர்வால். அப்படத்தைத் தொடர்ந்து அவருக்கு தற்போது தமிழில் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.
பூமி படத்தை தொடர்ந்து நிதி அகர்வால் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகை நிதி அகர்வால் மேலும் மற்றுமொரு புதிய தமிழ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது அதாவது மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
முதலில் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிகை அனு இம்மானுவேல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சினையின் காரணமாக அவர் அப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.