#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இவர் சுஜித் இல்லை.! தவறுதலாக பரவும் வீடியோ!! கண்ணீருடன் குழந்தையின் பெற்றோர்கள் விடுத்த கோரிக்கை!!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் வசித்து வந்த சுஜித் என்ற இரண்டு வயது ஆண்குழந்தை கடந்த வெள்ளிக்கிழமை 25ம் தேதி மாலை 5.40 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது அருகில் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. அதனை தொடர்ந்து ஐந்து நாட்களாக இரவு பகல் பாராமல் குழந்தையை மீட்பதற்கான தீவிரமாக பணிகள் நடைபெற்றது.
மேலும் தமிழக மக்கள் அனைவரும் சுஜித் உயிரோடு மீண்டுவரவேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்ட நிலையில் குழந்தை உயிரிழந்திருந்த தகவல் வெளிவந்தது.அதனை தொடர்ந்து நேற்று முதல்நாள் அதிகாலை சுஜித்தின் உடல் மோசமாக சிதைந்த நிலையில் ஆழ்துளை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின் பாத்திமாபுதூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இது தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்நிலையில் குழந்தை நடனமாடுவது, மற்றும் குழந்தைக்கு அஞ்சலி செலுத்துவது போன்ற சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் அந்த குழந்தை சுஜித் இல்லை என தகவல்கள் வெளியாகி வருகிறது.
மேலும் அந்த குழந்தை வேலூர் மாவட்டம் வெட்டுவானத்தை அடுத்த கொல்லமங்கலம் பகுதியை சேர்ந்த முனிவேல் மற்றும் சுகன்யாவின் இரண்டு வயது மகன் நித்தீஷ் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் நித்திஷின் பெற்றோர்கள் தங்களது குழந்தை உயிரோடு இருக்கும்போதே, அஞ்சலி செலுத்தும் வகையில் புகைப்படங்கள் வைரலாகி வருவது மிகுந்த வேதனை அளிப்பதாக கூறியுள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் தவறுதலாக பகிரப்பட்ட அந்த புகைப்படங்களை நீக்க வேண்டும் எனவும் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.