திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வெற்றிமாறனுக்கும், தனுஷுக்கும் நன்றி கூறிய நிதிஷ் வீரா..! அவர் வெளியிட்ட கடைசி வீடியோ.!
இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மிகத் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் நிகழும் ஆயிரக்கணக்கான மரணங்கள் சக நோயாளிகளையும், பொதுமக்களையும் மிகுந்த மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக சினிமா நடிகர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இறந்தவர்களில் பெரும்பாலானோர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், தமிழில் வல்லரசு, புதுப்பேட்டை, சிந்தனை செய், காலா, அசுரன், பேரன்பு உள்ளிட்ட ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நிதிஷ் வீரா காலமானார்.
Met him in Chennai , at a coffee shop.. 2 month before. Such a nice person. His role in #pudhupettai #asuran we can't forget it.
— DHANUSH CHOW3 (@dhanush_chow3) May 17, 2021
Can't believe this news. May his soul rest in peace. #RIPNitisVeera #Nitishveera #Nithishveera
pic.twitter.com/uStkJsjPdC
கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்றுவந்த இவர், நேற்று முன் தினம் அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் நிதிஷ் வீராவின் கொரோனா மரணம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில், அவர் கடைசியாக பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அசுரன் படத்தில் தனக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் வெற்றி மாறனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதேபோல் நடிகர் தனுஷுக்கும் நிதிஷ் வீரா நன்றி கூறியுள்ளார்.