திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
படப்பிடிப்பு தளத்தில் எஸ்பிபி பாடலை பாடி அசத்திய நடிகை நித்யா மேனன்! அதுவும் எந்த பாடல் பார்த்தீர்களா!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி மலையாளத்தில், நடிகர் ஜெயராமுடன் இணைந்து மார்க்கோனி மித்தாய் என்ற படத்தில் கௌரவ வேடத்தில் நடித்ததன் மூலம் அடியெடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மலையாளத்தில் அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்த நிலையிலும், கால்ஷீட் பிரச்னையால் விஜய் சேதுபதி தவிர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவர் மலையாளத்தில் இரண்டாவதாக
இந்து விஎஸ் என்பவர் இயக்கத்தில் 19(1)(a) என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் ஹீரோயினாக நித்யா மேனன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில்
இந்திரஜித் சுகுமாரன், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு கடந்த இரு வாரங்களாக கேரளாவில் உள்ள தொடுபுழாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது ஓய்வு நேரத்தில் திடீரென நித்யாமேனன் மைக்கை எடுத்து பாடியுள்ளார்.அவர் டூயட் படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி பாடிய என் காதலே என் காதலே பாடலை பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.