மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இப்போதான் எல்லாத்தையும் பாத்தேன்.! மன்னிச்சிடுங்க.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நிக்சன் போட்ட முதல் பதிவு.!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சென்று இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 7. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் நிக்சன். இவர் சில ஆல்பம் பாடல்களை பாடியுள்ளார். இசை கலைஞரான இவர் பிக்பாஸ் வீட்டில் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார். மேலும் போட்டியாளரான ஐஷூடன் நெருங்கி பழகி காதல் கன்டென்ட் கொடுத்து வந்தார்.
இந்த நிலையில் அவர் கடந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார். தொடர்ந்து அவர் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதன் முதலாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், இப்போதான் எல்லாத்தையும் பாத்தேன். எதிர்ப்பாக்காத எல்லாத்தையும் எதிர்ல பார்த்தது என்னா ஃபீல்…எவ்வளவு சப்போர்ட், எவ்வளவு லவ், இவ்வளவு பேருக்கு என்னை பிடிச்சுருக்குனு உள்ள இருக்கவரைக்கும் எனக்கு தெரியலை.ஒரு வேலை தெரிஞ்சிருந்தா இன்னும் முயற்சி எடுத்து இருப்பேனோ? ச்சே.. அதெல்லாம் யோசிக்கவே இல்லை. என்னை மன்னிச்சிடுங்க.
உள்ளே கப் ஜெயிக்கனும்னு போகலை, என்னை நல்லவனா காட்டிக்கனும்னு போகலை, நான் யாருன்னு நானே தெரிஞ்சுக்கதான் போனேன். இந்த வீடு தந்த அனுபவம், ஆண்டவர் கொடுத்த பாடம் மூலமா மனதளவில் நான் ட்யூன் ஆகியிருக்கேன். என்கிட்ட இருக்க நல்ல விஷயங்களை பாராட்டின எல்லோருக்கும் ரொம்ப நன்றி! என்கிட்ட இருந்த குறைகளை சுட்டிக்காட்டின, சுட்டி காட்டிகிட்டு இருக்கிற எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி!
நல்ல விஷயங்களை வளர்த்துருக்கேன், கெட்ட விஷயங்களை மாத்திக்கிறேன். அவ்வளவு நட்சத்திரங்களுக்கு நடுவில் யாருனே தெரியாத எனக்கு சப்போர்ட் பண்ண எல்லோருக்கும், இந்த வாய்ப்புங்கிற வாழ்க்கையை கொடுத்த எல்லோருக்கும் நன்றினு வார்த்தைலயில் சொன்னா பத்தாது வேலையில் காட்டுறேன் என தெரிவித்துள்ளார்.