#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அஜித்தின் அடுத்த படத்தில் இந்த ஒருவிஷயம் மட்டும் இருக்காதாம்! அது என்ன தெரியுமா?
விஸ்வாசம் படத்தை தொடர்ந்து பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் தல அஜித். பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படம் இன்றுவரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதோடு வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில் பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தை மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்தில் ஏகப்பட்ட பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில் பிங்க் ரீமேக் படம் குறித்து ஒருசில தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹிந்தியில் வெளியான இந்த படம் தமிழ் ரசிகர்களுக்காக ஒருசில காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தில் 4 பாடல்கள் உள்ளதாம், ஆனால் அஜித் ரசிகர்கள் எப்போதும் எதிர்ப்பார்க்கும் தல இன்ட்ரோ பாடல் இதில் இல்லையாம். இது தல ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்துள்ளது.