பழம்பெரும் நடிகை ஆர். சுப்பலட்சுமி காலமானார்... திரையுலகினர் இரங்கல்!!



Old actress R.sublakshmi died today

பிரபல பழம்பெரும் நடிகையும், இசைக்கலைஞருமான ஆர்.சுப்புலட்சுமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார். 

கேரளாவில் பிறந்த ஆர். சுப்புலட்சுமி 1951ல் அகில இந்திய வானொலியில் பணிப்புரிந்தார். தென்னிந்தியாவில் அகில இந்திய வானொலியின் முதல் பெண் இசையமைப்பாளர் என்ற சாதனையும் படைத்துள்ளார் ஆர். சுப்புலட்சுமி. முதன்முறையாக பிருத்விராஜ் நடித்த நந்தனம் திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து கல்யாணராமன், குளுஜூம், பாண்டிபடா, சிஐடி மூசா, சவுண்ட் தோமா போன்ற சுமார் 70க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Old actress sublakshmi

இவர் மலையாளம் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் விஜயின் பீஸ்ட் திரைப்படம், விண்ணை தாண்டி வருவாயா, ராமன் தேடிய சீதை, அம்மனி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆர். சுப்புலட்சுமி ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சிகிச்சையில் இருந்து வந்த சுப்புலட்சுமி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் இறப்புக்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.