மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் ஆரவ் திருமணத்திற்கு போகாதது இதனால்தானா? முதன்முதலாக மனம்திறந்த நடிகை ஓவியா!
விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு வெற்றி பெற்றதன் மூலம் மூலம் பிரபலமானவர் ஆரவ். அதனை தொடர்ந்து அவர் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது ஆரவ்வை சகபோட்டியாளரான நடிகை ஓவியா காதலித்தார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில் ஓவியா தற்கொலை முயற்சிவரை சென்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
ஆனால் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இருவரும் ஒன்றாக வெளியில் செல்வது, வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. மேலும் இருவரும் காதலிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அவர்கள் நாங்கள் நண்பர்கள்தான் என கூறி வந்தனர்.
இந்நிலையில் ஆரவ்விற்கு நடிகை ராஹி என்பவருடன் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஓவியா கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் ஓவியா இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்பொழுது ரசிகர் ஒருவர், நீங்கள் ஏன் ஆரவ் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என கேள்வியெழுப்பியதற்கு ஓவியா, ஆரவ்வின் திருமணத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்போது நான் கேரளாவில் இருந்ததால்தான் திருமணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. இருவருக்குள் என்ன இருந்ததோ அது முடிந்துவிட்டது. இனி மீண்டும் அதைப்பற்றி யாரும் கேட்காதீர்கள் என கூறியுள்ளார்.