மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னாச்சு! காதலனுக்கு திருமணமான விரக்தியா? நடிகை ஓவியா வெளியிட்ட பதிவால் குழம்பிப்போன ரசிகர்கள்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதன் மூலம் பிரபலமானவர் ஆரவ். அதனை தொடர்ந்து அவர் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த போது ஆரவ்வை சகபோட்டியாளரான நடிகை ஓவியா காதலித்தார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்த நிலையில் ஓவியா தற்கொலை முயற்சி மேற்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
ஆனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, இருவரும் ஒன்றாக வெளியில் செல்வது, வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. மேலும் இருவரும் காதலிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இருவரும் நாங்கள் நண்பர்கள்தான் என கூறி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் ஆரவ்விற்கு நடிகை ராஹி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் இந்த திருமணத்தில் ஓவியா கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் இதுகுறித்து ஓவியா தனது சமூக வலைதளப்பக்கத்தில் ஏதேனும் கருத்து தெரிவிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தநிலையில் அவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த உலகம் ஒரு ஆபத்தான இடமாகும். இது தீமை செய்பவர்களால் அல்ல. அது பார்த்துகொண்டு ஒன்றும் செய்யாதவர்களால்தான் என பதிவிட்டுள்ளார் இதனை கண்ட நெட்டிசன்கள் காதலனுக்கு திருமணமான விரக்தியா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
The world is a dangerous place not because of those who do evil,it’s because of those who look on and do nothing
— Oviyaa (@OviyaaSweetz) September 11, 2020