திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மேடையில் இசைக்கு ஏற்ப குத்தாட்டம் போட்ட இயக்குனர் பா ரஞ்சித்.. தீயாய் பரவும் வீடியோ.?
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருந்து வருபவர் பா ரஞ்சித். இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார்.
தமிழில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பா ரஞ்சித் மெட்ராஸ், கபாலி, காலா, நட்சத்திரம் நகர்கிறது, சார்பட்டா பரம்பரை, பரியேறும் பெருமாள் போன்ற பல ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.
இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் பா ரஞ்சித் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் மக்கள் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பின்இந்த வருடம் ஓசூரில் நடைபெற்ற மக்கள் இசை நிகழ்ச்சியில் பல பிரபலங்கள், இசை கலைஞர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மேடையில் நடன கலைஞர்கள் நடனம் ஆடிக் கொண்டிருக்கும்போது பா ரஞ்சித்தும் அவர்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்டார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.