மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"இளையராஜாவுடன் பா. ரஞ்சித் திடீர் சந்திப்பு!" என்ன காரணமா இருக்கும்!"
2012ம் ஆண்டு "அட்டகத்தி" திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். முதல் படமே இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இதையடுத்து கார்த்தியை வைத்து "மெட்ராஸ்" படத்தை இயக்கினார். இதன்மூலம் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து ரஜினியை வைத்து "கபாலி" என்ற ப்ரம்மாண்டப் படத்தை இயக்கி உலகளவில் பிரபலமானார். தொடர்ந்து காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள இவர், முன்னதாக வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக இருந்துள்ளார்.
தற்போது விக்ரமை வைத்து "தங்கலான்" படத்தை இயக்கி முடித்துள்ள பா. ரஞ்சித், இப்போதே தனது அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் பா. ரஞ்சித் இளையராஜாவை சந்தித்து அம்பேத்கர் எழுதிய காதல் கடிதங்கள் புத்தகத்தை பரிசளித்துள்ளார்.
இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும், பா. ரஞ்சித் இயக்கப்போகும் அடுத்த படத்தில் இளையராஜா இசையமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது என்று திரையுல வட்டாரத்தில் தகவல் கசிந்து வருகிறது.