திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு கிடைத்த கவுரவம்.! குடியரசுத் தலைவரிடம் பெற்றுக் கொண்டார் பிரேமலதா!!
தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் ரசிகர்கள் படையை கொண்டு முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவில் தனக்கென தக்க இடத்தை பிடித்த அவர் அரசியலில் களமிறங்கி தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார்.
நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது
அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் காலமானார். இந்த நிலையில் விஜயகாந்தின் கலை மற்றும் அரசியல் சேவையை பாராட்டி அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று டெல்லியில், குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விருதை பெற்றுகொண்டார் பிரேமலதா
இந்த விழாவில் மறைந்த நடிகரும், அரசியல் தலைவருமான விஜயகாந்துக்கான விருதை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கியுள்ளார். அதனை விஜயகாந்த் சார்பில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக் கொண்டுள்ளார். விருதைப் பெற்றுக் கொண்டபோது பிரேமலதா கண்ணீர் மல்க அதனை விஜயகாந்துக்கு சமர்ப்பிக்கும் வகையில் மேல்நோக்கி பார்த்துள்ளார்.