மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என் தலையெழுத்து.. எப்படியெல்லாம் பரப்பிவிடுறாங்க.! புலம்பும் பாக்கியலட்சுமி கோபி.!வைரல் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடர் இல்லரசிகளை பெருமளவில் கவர்ந்துள்ளது. தொடரில் கோபி தனது மனைவியான பாக்கியலட்சுமியை விவாகரத்து செய்து விட்டு, முன்னாள் காதலியான ராதிகாவை திருமணம் செய்துகொள்கிறார். பின்னர் ராதிகாவுடன் தனது வீட்டிற்கு எதிரேயே வந்து குடியேறுகிறார்.
இந்த நிலையில் பாக்கியா கேட்டரிங் பிசினஸ் தொடங்கி கோபிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அடுத்தடுத்ததாக பெருமளவில் முன்னேறுகிறார். இதற்கிடையே தொடரில் நடிகர் ரஞ்சித் என்ட்ரி கொடுத்துள்ளார். ஆங்கிலம் கற்றுக்கொள்ள செல்லும் இடத்தில் பாக்யாவிற்கும் ரஞ்சித்திற்கும் நல்ல பழக்கம் ஏற்படுகிறது.
இந்த நிலையில் இனி தொடரில் ரஞ்சித் தொடர்பான காட்சிகள் அதிகமாக இருக்கும் எனவும், தான் நடிக்கும் காட்சிகள் குறைவாக இருக்கும் என்றும் வீடியோ ஒன்றில் கோபியாக நடிக்கும் சதீஷ் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவில் இனி ரஞ்சித் சார் தொடர்பான காட்சிகள் அதிகமாக இருக்கும். எனது காட்சிகள் குறைய வாய்ப்பு உள்ளது என கூறியிருந்தேன். உடனே சில சேனலில் கோபி பாக்கியலட்சுமி சீரியலிருந்து விலகுகிறார் என கூறிவிட்டனர். என் தலையெழுத்து என கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.